1. திருச்சபை காத்திருக்க எந்நாள், நாதா, வருவீர்? எந்நாள் துக்க ரா முடிய பகல் விடியச் செய்வீர்? நெல் விளைந்து வாடிப்போக அறுப்போரும் குறைந்தார்; சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள கிறிஸ்து வீணாயோ மாண்டார்? 2. சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி கோடாகோடி கேளாரே யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி? நாதா, வார்த்தை ஈயுமே; வார்த்தை ஈயும் சுவிசேஷ தொனி எங்கும் ஒலித்தும், எல்லாத் தேசத்தாரும் திவ்விய மீட்பைக் கேட்க செய்திடும் 3. நீர் தெரிந்தோர் ஈறுகாலம் ஒன்றாய் சேர்க்கப்படுவார்; சாத்தான் கட்டப்பட்டுப் பாவம் மாய, கிறிஸ்து ஆளுவார்; பசி தாகம் நோவு சாவும் கண்ணீர் யாவும் நீங்கவே திருச்சபை காத்திருக்கும் இயேசு ஸ்வாமி, வாருமே.