கர்த்தாவே மாந்தர் தந்தையே, பேதையோர் பொறுப்பீர்; சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே பக்தோராய்ச் சேவை செய்துமே பணிந்து போற்றிட நன்னாதர் அன்பின் அழைப்பை தட்டாமல் நம்பியே பன்னிரு சீஷர்தாம் உம்மை பின்சென்றவண்ணம் நாங்களும் பின்செல்லச் செய்வீரே. மா கலிலேயா ஓய்வினில் அமைதி குன்றின்மேல், ஓயாதமைதி ஸ்தலத்தில் ஆ இயேசு நாதா, ஜெபத்தில் அன்பாக அமர்ந்தீர். உம் சாந்த ஆவி ஊற்றிடும் எம் உள்ள கோஷ்டத்தில் உளம் வருத்தும் தொல்லையே ஒழிந்திட, உம் சாந்தியே உள் வாழ்க்கை ஊன்றிட. அலைக்கழிக்கும் ஆசையை அடக்கும் ஆவியால் மா காற்று கம்பம் அக்கினியில் ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே அடியார் கேட்கட்டும்.