1. அபிஷேகம் பெற்ற சீஷர் தெய்வ வாக்கைக் கூறினார் கட்டளை கொடுத்த மீட்பர் “கூட இருப்பேன்” என்றார். 2. இயேசுவே, நீர் சொன்ன வண்ணம் ஏழை அடியாருக்கே ஊக்கம் தந்து நல்ல எண்ணம் சித்தியாகச் செய்வீரே. 3. முத்திரிக்கப்பட்ட யாரும் ஆவியால் நிறைந்தோராய் வாக்கைக் கூற வரம் தாரும், அனல்மூட்டும் தயவாய். 4. வாக்குத்தத்தம் நிறைவேற சர்வ தேசத்தார்களும் உந்தன் பாதம் வந்து சேர அநுக்கிரகம் செய்திடும். 5. பிதா, சுதன், தூய ஆவி என்னும் தேவரீருக்கே தோத்திரம், புகழ்ச்சி, கீர்த்தி விண் மண்ணில் உண்டாகுமே.