1. பயத்தோடும் பக்தியோடும் தூய சிந்தையுள்ளோராய் சபையார் அமர்ந்து நிற்க, ஆசீர்வாத வள்ளலாம் தெய்வ சுதன் கிறிஸ்து நாதர் ராஜனாய் விளங்குவார். 2. வேந்தர்க்கெல்லாம் வேந்தர் முன்னே கன்னிமரி மைந்தனாய் பாரில் வந்து நின்றார்; இதோ, சர்வ வல்ல கர்த்தராய் வானாகாரமான தம்மால் பக்தரைப் போஷிப்பிப்பார். 3. தூத கணங்கள் முன்சென்று பாதை செவ்வை பண்ணவே விண்ணினின்று அவர் தோன்ற ஜோதியில் மா ஜோதியாய், வெய்யோன் கண்ட இருள் எனத் தீயோன் ராஜ்யம் மாயுமே. 4. ஆறு செட்டையுள்ள சேராப், கண்வளரா கேரூபின் செட்டையால் வதனம் மூடி, என்றும் ஆரவாரித்து அல்லேலூயா, அல்லேலூயா, கர்த்தா, என்று போற்றுவார்.