1. என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே உம் பாதத்தண்டை நிற்கிறேன் திக்கற்ற பிள்ளை கெஞ்சவே தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன். 2. என் கிரியைகள் எம்மாத்திரம்? பிரயாசை எல்லாம் விருதா உம்மாலேயே மெய்ப் பாக்கியம் உண்டாகும் நேச ரட்சகா. 3. உந்தன் சரீரம் ரத்தமும் மெய்ப் பொருள் என்று அறிவேன் உட்கொண்டன்பாய் அருந்தவும் நான் பரவசமாகுவேன். 4. மாசற்ற திரு ரத்தத்தை கொண்டென்னைச் சுத்திகரியும் மா திவ்விய ஜீவ அப்பத்தை என் நெஞ்சத்தில் தந்தருளும். 5. என் நாதா உம் சரீரமே மேலான திவ்விய போஜனம் மாசற்ற உந்தன் ரத்தமே மெய்யான பான பாக்கியம்.