1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்; என்றாலும் தாசன் பேரிலே கடாக்ஷம் வையுமேன். 2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே. 3. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரக்ஷகா; என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா. 4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன் நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன். 5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்; மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர். 6. என் பக்தி, ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்; உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன். 7. என் ஆவி, தேகம், செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்; ஆ இயேசுவே, சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்.