1. ஆ, எத்தனை நன்றாக நீர் தேற்றினீர், என் இயேசுவே நீர் உம்மைத்தான் ஊணாக இப்போதெனக்குத் தந்தீரே இத்தால் அடியேனுக்கு நீர் செய்த கிருபை நீர் என்னை மீட்டதற்கு எனக்கு முத்திரை மகா அருமையான இவ்வன்பு யாவுக்கும் உமக்கனந்தமான துதி உண்டாகவும். 2. இத்தயவை நினைத்து நான் என்றும் உமக்கென்னுட இதயத்தைப் படைத்து, சன்மார்க்கமாயிருக்கிற நடக்கையாய் நடந்து நீர் காட்டும் பாதையில் உம்மைப் பின்சென்றுவந்து, மெய் விசுவாசத்தில் எப்போரிலும் நிலைக்க, அடுத்தவரையும் அன்பால் அரவணைக்க இதென்னை ஏவவும். 3. நீர் இந்த மா உயர்ந்த அதிசய சிநேகமாய் உம்மை எனக்குத் தந்த படியினாலே, உண்மையாய் அடியேன் என்னிலுள்ள இருதயத்தையும் யாவற்றையும், அன்புள்ள கர்த்தாவே, உமக்கும் தந்தேன்; ஆ, உம்மில் நானும் இனி என்றென்றைக்கும் இருக்கவும், நீர் தாமும் என்னில் இருக்கவும்.