1. இளைஞர் நேசா, அன்பரே, அடியேனை உம் சொந்தமாய் படைத்திட சமூலமாய், ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன். 2. இளமைக் காலை என்னையே படைப்பேன் வாக்குப்படியே, பின்வையேன் ஒன்றும் – இப்போதே பூரண ஆவலாய் வந்தேன். 3. ஒளியில் என்றும் ஜீவிப்பேன் நீதிக்காய் என்றும் உழைப்பேன் முழுபலத்தால் சேவிப்பேன் உம்மண்டை ஆதலால் வந்தேன். 4. சிறியேன் திடகாத்திரன்; சத்தியம், நீதி, உமக்காய் ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்; ஜீவாதிபதி - நான் வந்தேன். 5. பொன், புகழ், சித்தி, இன்பமும் மேன்மையாய்த் தோன்றும் – ஆயினும் விஸ்வாசமே மேல் நாட்டமாய் ஜீவநாள் முற்றிலும் – வந்தேன். 6. உமக்காய் மேன்மை யடைய, ஜெயித்து கிரீடம் சூடிட, பணிந்தும் பாதம் படைக்க, ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன்.