1. வான ஜோதியாய் இலங்கி மாண்பாய்ப் பொன்முடி தாங்கி தெய்வ ஆசனமுன் நிற்பார் மாட்சியாம் இவ்வானோர் யார்? அல்லேலூயா! முழங்கும் விண்ணின் வேந்தர் துதியும். 2. பகலோனின் ஜோதியோடு தெய்வ நீதி அணிந்து தூய வெண்மையான அங்கி என்றும் தூய்மை விளங்கி தூயோராய்த் தரித்தனர் எங்கிருந்து வந்தனர்? 3. ஜீவ காலம் முற்றும் மீட்பர் மேன்மைக்காய்ப் போராடினர் லோகத்தாரின் சேர்க்கை நீக்கி சாவு மட்டும் போராடி போரில் முற்றும் நின்றனர் மீட்பராலே வென்றனர். 4. வேதனை தம் நெஞ்சைப் பீற ஓங்கு துன்பம் சூழ்ந்திட பணிந்து தம் தெய்வம் நோக்கி வேண்டலோடு போராடி இப்போ போர் முடித்திட்டார் ஸ்வாமி கண்ணீர் நீக்கினார். 5. சர்வ வல்லோர் சந்நிதியில் திவ்விய ஊழியத்தினில் நின்று, தேகம் ஆவியோடு கட்டளை கீழ்ப்படிந்து உன்னதத்தில் சேர்ந்திட்டார் என்றும் தெய்வம் நோக்குவார்.