1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; உம் நீண்ட போர் முடிந்ததே; வெற்றிகொண்டே, சர்வாயுதம் வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்; சீர் பக்தரே, அமர்ந்து நீர் இயேசுவின் பாதத்தில் வாழ்வீர். 2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; மா அலுப்பாம் பிரயாணத்தை முடித்து, இனி அலைவும் சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்; சீர் பக்தரே, அமர்ந்து நீர் நல் வீட்டில் இளைப்பாறுவீர். 3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே; இப்போதபாய புயலும் உம்மைச் சேராது கிஞ்சித்தும்; சீர் பக்தரே, அமர்ந்து நீர் இன்பத் துறையில் தங்குவீர். 4. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; உம் மேனி மண்ணில் தூங்கவே, மாண்பாய் எழும்புமளவும் விழித்துக் காத்துக்கொண்டிரும்; சீர் பக்தரே, மகிழ்ந்து நீர் நம் ராஜா வருவார் என்பீர். 5. கேளும், தூயோரின் நாதரே, பரிந்து பேசும் மீட்பரே, வாழ் நாள் எல்லாம், நல்லாவியே, கடாட்சம் வைத்து ஆளுமே; சீர் பக்தரோடு நாங்களும் மேலோகில் சேரச் செய்திடும்.