ஆ கர்த்தாவே , தாழ்மையாக\n திருப்பாதத்ண்டையே \n தெண்டனிட ஆவலாக \n வந்தேன், நல்ல இயேசுவே; \n உம்மை தேடி \n தரிசிக்கவே வந்தேன். \n \n வல்ல கர்த்தாவினுடைய\n தூய ஆட்டுக்குட்டியே ,\n நீரே என்றும் என்னுடைய\n ஞான மணவாளனே ;\n உம்மை தேடி\n தரிசிக்கவே வந்தேன் .\n\n என் பிரார்த்தனையைக் கேளும்,\n அத்தியந்த பணிவாய்\n கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்\n உம்முடைய பிள்ளையாய்\n உம்மை தேடி தரிசிக்கவே வந்தேன்\n