1. தூயர் ராஜா, எண்ணிறந்த வான்மீன் சேனை அறிவீர் மாந்தர் அறியா அநேகர் உம்மைப் போற்றப் பெறுவீர் எண்ணரிய பக்தர் கூட்டம் லோக இருள் மூடினும் விண்ணின் ராஜ சமுகத்தில் சுடர்போல விளங்கும். 2. அந்தக் கூட்டத்தில் சிறந்த ஓர் அப்போஸ்தலனுக்காய் நாங்கள் உம்மைத் துதிசெய்வோம் வருஷா வருஷமாய் கர்த்தர்க்காக அவன் பட்ட நற் பிரயாசம் கண்டதார்? பக்தரின் மறைந்த வாழ்க்கை கர்த்தர்தாமே அறிவார். 3. தாசரது ஜெபம், சாந்தம் பாடு, கஸ்தி யாவுமே தெய்வ மைந்தன் புஸ்தகத்தில் தீட்டப்பட்டிருக்குமே இவை உந்தன் பொக்கிஷங்கள் நாதா, அந்த நாளிலும் உம் சம்பத்தை எண்ணும்போது எண்ணும் அடியாரையும்.