1. கர்த்தர் சமீபமாம் என்றே யோர்தான் நதியின் அருகே, முன் தூதன் யோவான் கூறிடும் நற்செய்தி கேட்க விழியும். 2. விருந்தும் போன்றே நாதனார் நம் நெஞ்சில் வந்து தங்குவார் அவர்க்கு வழி ஆகவும் அகத்தைச் சுத்தம் பண்ணுவோம். 3. நாதா, நீர் எங்கள் தஞ்சமும், ரட்சிப்பும், ஜீவ கிரீடமும் உம் அருள் அற்ற யாவரும் உலர்வார் புஷ்பம் போலவும். 4. நோய் கொண்டோர் சொஸ்தமாகவும் வீழ்ந்தோர் கால் ஊன்றி நிற்கவும் பூலோகம் சீர் அடையவும் எழும்பி நீர் பிரகாசியும். 5. உமக்கு சாட்சி கூறியே வழி ஆயத்தமாகவே, யோவான் ஸ்நானன்போல் நாங்களும் உம் அருள் பெறச் செய்திடும்.