1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே, மந்தையைப் பட்சிக்கவும் சாத்தான் பாயும் ஓநாய் போல் கிட்டிச்சேரும் நேரமும், நாசமோசம் இன்றியே காரும், நல்ல மேய்ப்பரே. 2. பணம் ஒன்றே ஆசிக்கும் கூலியாளோ ஓடுவோன்; காவல் இன்றிக் கிடக்கும் தொழுவத்தின் வாசல்தான்; வாசல், காவல் ஆன நீர் மந்தைமுன் நின்றருள்வீர். 3. கெட்டுப்போன யூதாஸின் ஸ்தானத்திற்குத் தேவரீர், சீஷர் சீட்டுப்போடவே மத்தியா நியமித்தீர்; எங்கள் ஐயம் யாவிலும், கர்த்தரே, நடத்திடும். 4. புது சீயோன் நகரில் பக்தர் வரிசையிலே நிற்கும் மத்தியாவோடும் நாங்கள் சேரச் செய்யுமே கண் குளிர உம்மையும் காணும் பாக்கியம் அருளும்.