விண் போகும் பாதை தூரமாம் என்றே நாம் என்னுவோம் பகைஞரின் கொடுரமாம் வன்மையை உணர்வோம் ஆனால் எப்பாடும் பாவமும் இல்லா அவ்விண்ணையே நாம் கண்டிலோம், நாம் காணவும் இம்மையில் கூடாதே சிற்றின்பத்தை வெறுத்தலும் உள்ளத்தை முற்றும் நாம் கர்த்தாவுக்கு கொப்பிவித்தலும் அரிதென் றெண்ணலாம் ஆனாலோ, பாவம் நீக்கிட அகோர வேதனை மீட்பர் அடைந்து மாண்டதும் நாம் காணக்கூடாதே பக்தன் தோமாவே, உன் போலும் கண்ணால் காணாமலே விஸ்வாசம் தக்கதாயினும் சந்தேகம் கொள்வோமே என்றாலும் காணாதிருந்தும் விஸ்வாசித்தோர் பாக்கியர் என்றே நீ பெற்ற வாக்கையும் நாங்களும் சார்ந்தவர்