அநாதியான கரத்தரே தெய்வீக ஆசனத்திலே வானங்களுக்கு மேலாய் நீர் மகிமையோடிருக்கிறீர் பிரதான தூதர் உம்முன்னே தம் முகம் பாதம் மூடியே சாஷ்டாங்கமாகப் பணிவார் நீர் தூய தூயர் என்னுவார் அப்படியானால் தூசியும் சாம்பலுமான நாங்களும் எவ்வாறு உம்மை அண்டுவோம் எவ்விதமாய் ஆராதிப்போம் நீரோ உயர்ந்த வானத்தில் நாங்களோ தாழ்ந்த பூமியில் இருப்பதால் வணங்குவோம் மா பயத்தோடு சேருவோம்