1. தெய்வ ஆவியே, பூர்வ நாளிலே பலபாஷை பேசும் நாவும் மேன்மையான வரம் யாவும் உம்மால் வந்ததே, தெய்வ ஆவியே. 2. சத்திய ஆவியே, போதகர் நீரே; மீட்பர் அருமையைக் காட்டி, அவர் சாயலாக மாற்றி என்னை ஆளுமே, சத்திய ஆவியே. 3. ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர், சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க, ஆத்துமாவின் தாகம் தீர்க்க ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர். 4. நேச ஆவியே, எந்தன் நெஞ்சிலே ஐயம் நீங்க இச்சை மாள, தெய்வ சமாதானம் ஆள, வாசம் பண்ணுமே, நேச ஆவியே.