1. நல்ல ஜெயம், போர் செய்தின்றே வரும் மகாராஜாவுக்கே; அவரைச் சேர்ந்தோர்யாவரும் இந்த ஜெயத்தைப் பாடவும். நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 2. மீட்பர் அடைந்த வெற்றியால் சிஷ்டி மலரும் களிப்பால்; சீர்கெட்ட பூமிக்குள்ளதாம் சாபம் அத்தால் நிவர்த்தியாம். நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 3. கர்த்தர் மரிக்கும் நாளிலே இருண்ட சூரியன் இன்றே அவர் உயிர்த்தவெற்றிக்கு ப்ரகாசமாய் விளங்கிற்று. நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 4. மா சாந்த ஆட்டிக்குட்டியாய் இருந்தோர் வல்ல சிங்கமாய் வந்தார், பகைஞருடைய பத்திரக் காவல் விருதா. நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 5. பாவ விஷத்தின் தோஷமும் அத்தால் இருந்த தீமையும் ரட்சகராலே நீங்கிற்று; மகிமை தேடப்பட்டது. நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 6. உத்தவாதமாயிற்று, சபிக்கப்பட்ட ஆவிக்கு நம்மில் பலமில்லாதேபோம், சாவுக்கினி பயந்திரோம். நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 7. மேட்டிமையான பேலியாள் தள்ளுண்டு போய் விழுந்ததால் அதின் அரண்கள் யாவுக்கும் நிர்மூலமாகுதல் வரும். நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 8. சீஷரின் ஆத்துமங்களை நீர் தேற்றி, சமாதானத்தைத் தந்த்துபோலே, இயேசுவே, நீர் எங்களுக்கும் ஈவீரே. நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 9. நாங்கள் உடந்தையாய் உம்மால் ஜெயித்து, மோட்ச வாசலால் உட்பிரவேசித் தென்றைக்கும் உம்து அன்பைப் பாடவும். நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா.