இயேசு: “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார். லூக்கா 23:46 1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து தெளிந்த அறிவோடு ஆவியை ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே. 2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம் நீர் தாங்கி, மனதார மரித்தீர்; உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும் அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர். 3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து, மரண அவஸ்தை உண்டாகையில், தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து, ஒளி உண்டாக்கும் அச்சராவினில். 4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்; என் தலையை உம் மார்பில் அணைத்தே என் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்; அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே