1. பாவ நாசர் பட்ட காயம் நோக்கி தியானம் செய்வது ஜீவன், சுகம், நற்சகாயம், ஆறுதலும் உள்ளது. 2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே அன்பின் வெள்ளம் ஆயிற்று; தெய்வ நேசம் அதினாலே மானிடர்க்குத் தோன்றிற்று. 3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம் தஞ்சம் என்று பற்றினேன்; அவர் திவ்விய நேச முகம் அருள் வீசக் காண்கிறேன். 4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி துக்கத்தால் கலங்குவேன்; அவர் சாவால் துக்கம் மாறி சாகா ஜீவன் அடைவேன். 5. சிலுவையை நோக்கி நிற்க, உமதருள் உணர்வேன்; தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட, சமாதானம் பெறுவேன். 6. அவர் சிலுவை அடியில் நிற்பதே மா பாக்கியம்; சோர்ந்த திரு முகத்தினில் காண்பேன் திவ்விய உருக்கம். 7. உம்மை நான் கண்ணாரக் காண விண்ணில் சேரும் அளவும், உம்மை ஓயா தியானம் செய்ய என்னை ஏவியருளும்.