1 இயேசு பட்ட மா பலத்த ஐந்து காயம் வாழ்த்துவேன்; மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும் அதையே வணங்குவேன். 2 பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி பாவத்தை அரோசிப்பேன்; எனக்காக நீர் அன்பாக பட்ட வாதைக்கழுவேன். 3 மாளுகையில் மீட்பர் கையில் ஆவியை ஒப்புவிப்பேன்; நான் குத்துண்ட திறவுண்ட பக்கத்தில் ஒதுங்குவேன்.